• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

December 1, 2021 தண்டோரா குழு

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எச்.ஐ.வி., என்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு, 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேரணியை தொடங்கி வைத்தார். 300க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துக்கொண்ட பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெற்றது.

முன்னதாக ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். முன்னதாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க