• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகள் உட்பட 20 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதி

December 4, 2021 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகள் உட்பட 20 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால் மாவட்டத்தில் ஊரக மற்றும் மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுவை ஒழித்து மருந்து தெளித்தல் கொசு மருந்து அடித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இருந்தபோதிலும் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது டெங்குக் காய்ச்சலானது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிகமாக பாதித்து வருகிறது. அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பின் காரணமாக 17 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 3 பேர் என மொத்தம் 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அங்கு உள்ள சிறப்பு வார்டில் வைத்து டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க