• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் கொரானா சிறப்பு வார்டில் கல்லூரி மாணவி அட்மிட்

March 19, 2020

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் கொரானா அறிகுறி தென்படும் நபர்களுக்கு திருச்சி ரோட்டில் உள்ள கோவை அரசு மருத்துவமனை மற்றும் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு கொரானா வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கோவை சூலூர் அடுத்து காங்கயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கோவை அரசு மருத்துவமனையில் கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர் பெங்களூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி ரயில் மூலம் கோவை வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக இருமல் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.

இதையடுத்து சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அவருக்கு கொரானா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கொரானா வார்டில் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மாணவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க