• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

March 6, 2019 தண்டோரா குழு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட 15 பேராசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டதை திரும்பபெற வலியுறுத்தி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சத்துணவு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணியிடை நீக்கம் மற்றும் பணிமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதில் தமிழகம் முழுவதும் கைது செய்யபட்ட 25 பேராசிரியர்களில் பணியிடை நீக்கம் செய்யபட்டு அரசு திரும்பபெற்றது.

இந்நிலையில் 15 பேராசியர்களை மட்டும் அரசு,பழி வாங்கும் நோக்கில் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனை கண்டித்தும், பேராசிரியர்களின் இடமாறுதலை தமிழக அரசு திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க