• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 8 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம்

July 15, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகரில் , 8 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .

அதன்படி,மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெ சரவணன் , சரவணம்பட்டி ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டார்.அதே போல் மேற்கு மண்டலத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கணேஷ்குமார் ,பீளமேடு ஆய்வாளராகவும்,தமிழலரசு சாய்பாபா காலணி ஆய்வாளராகவும்,கிருஷ்ண லீலா , ரேஸ்கோர்ஸ் புலனாய்வு பிரிவு ஆய்வாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவில் பணியாற்றிய தெய்வமணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல்,சுந்தரேசன் சைபர் கிரைம் ரீஜினல் லேப் ஆய்வாளராகவும்,சதீஸ்,குனியமுத்தூர் ஆய்வாளராகவும்,சுஜாதா,உக்கடம் புலனாய்வு ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க