• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

December 9, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான்,கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 5 குற்றவாளிகள்(DRUG OFFENDERS)மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை மாவட்டம், ஆலந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கோவை P.N. புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30),கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன் ஜொனாதன் சதீஷ் (31), ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (31), காளிமுத்து மகன் *சரவணகுமார் (26) மற்றும் கோவைசாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஹரி மகன் நிஷாந்த் (23) ஆகிய ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் *Dr.K.கார்த்திகேயன்,பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மேற்கண்ட நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி போதை ஏற்படுத்தக்கூடிய காளான்,கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கின் குற்றவாளிகளான அமரன் (30),ஜொனாதன் சதீஷ் (31), பிரசாந்த் (31), சரவணகுமார் (26) மற்றும் நிஷாந்த் (23) ஆகிய ஐந்து நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 21 கஞ்சா வழக்கு குற்றவாளிகள்(DRUG OFFENDERS) உட்பட 71 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க