• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 4483 பேரின் வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது – எஸ்.பி.வேலுமணி

March 28, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 4483 பேரின் வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .மேலும் கோவை அஇதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் S.P.வேலுமணி வழங்கினார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில்,

முதலமைச்சர் உத்தவுக்கிணங்க கொரோனா தடுப்பில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொரோனா நோயை பேரிடராக அறிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கை வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1508 ஆய்வக நுட்பனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் 100 செவிலியர்கள் தேர்வானையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.200 அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 இசன்களில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. ஒரு மீட்டர் இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கவும் குறித்த நேரம் விற்பனை நடத்தவும் குறிப்பிட்டுள்ளது.அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி,ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.ஆட்டோ தொழிலாளர் குடும்பத்துக்கும் வழங்கப்படும்.
சாலைகளில் கடை வைத்துள்ளோருக்கு அரசின் ஆயிரம் ரூபாயுடன் ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் கோவை ஈ எஸ் ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கயாக 540 படுக்கைகள் உள்ளது.கூடுதலாக 400 படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 சுகாதார நிலையங்களில் கொரோனா முதலுதவி சிகிச்சைக்கான படுக்கைகள் தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஈ எஸ் ஐ 500 மருத்துவர்கள் 400 செவிலியர்கள் 140 சுகாதார பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 4483 பேரின் வீடுகள் தனிமைபடுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.கே எம் சி எச் தனி மருத்துவமனை அறிவித்துள்ளது.ஈஷா மையம் தங்கள் வளாகத்தை கொரோனா தடுப்பிற்காக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.பல தன்னார்வலர்கள் உதவி வருகின்றனர்.கோவை மாவட்டத்திலுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேரும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 கோடி ருபாய் வழங்கி உள்ளோம்.கோவை மாநராட்சியில் விசை பம்புகள்,டிரோன் மற்றும் லாரிகள் மூலம் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்ட அதிமுக சார்பில் மாநகராட்சி பணியாளர்களுக்கு 7000 முக கவசங்கள் 5000 ரப்பர் கையுரை மற்றும் சேனிடைசர் உள்ளிட்டவை 25 லட்சம் மதிப்பில் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளோம். கொரோனா தடுப்பு நடவடிக்கை பொறுத்தவரை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்.வைட்டமின் சி உணவுகளை மக்கள் அதிகமாக உண்ண வேண்டும் யோகா செய்ய வேண்டும். உணவு தட்டுப்பாடு வராமல் தடுக்க நான்கு சமுதாய உணவு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.கேரளாவிலிருந்து யாரும் தமிழகத்திற்குள் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அது குறித்து கேரள அமைச்சரிடமும் பேசியுள்ளோம்.பாலக்காட்டில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள தமிழர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்ய கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டியுடன் சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசி வலியுறுத்தியுள்ளார். கோவையிலுள்ள வடமாநில தொழிலாளர்கள் உட்பட யாருக்கும் உணவில்லாமல் இருந்தால் உடனடியாக தகவலளித்தால் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.கால்நடை தீவனங்கள் கொண்டு வருவத்இல் எவ்வித பிரச்சிணைகளும் ஏற்பாடாது.உடனடியாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்.

மேலும் படிக்க