• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 28 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

April 5, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 28 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளனர்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த நிரஞ்சன் அருண் ரீகன், கார்த்திக், உள்ளிட்ட மூன்று பேர் மீதும் ஆள் கடத்தல்,கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொமை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கோவை மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினரால் பல ஆண்டுகள் தேடப்பட்டு வந்த மூவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடவள்ளி பகுதியில் பெண் வன்கொடுமை மற்றும் டாஸ்மாக் பார் அடித்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பேரூர் சரக துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க