• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 107 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டம் விரைவில் துவங்கும்

May 14, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் தவிர்த்து மாநகராட்சி சார்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் உப்பு நீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது.

மேலும்,சில ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இல்லாததால் பயன்பாடு இன்றி விடப்பட்டுள்ளது. இதனால்,பொதுமக்களுக்கு உப்பு தண்ணீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில்,ரூ.5 கோடிக்கு 107 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக,ஒப்புதல் மாநகராட்சி கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

இதுதவிர,ஏற்கனவே உள்ள பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அதன்படி,சுமார் 200 ஆழ்துளை கிணறுகள் மறுபுனரமைப்பு செய்யப்படும்.இந்த பணிகள் நிறைவடைந்தால் மாநகராட்சி பகுதியில் உப்பு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாநகராட்சியில் 107 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டம் விரைவில் துவங்க உள்ளது.மேலும்,தேவையான இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’’ என்றார்.

மேலும் படிக்க