• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 100 கிலோ போலி நெய் பறிமுதல் – உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

February 4, 2020 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து சுமார் 30 ஆயிரம் மதிப்பிளான 100 கிலோ போலி நெய்யை பறிமுதல் செய்தனர்..

கோவை‌ மாநகர பகுதிகளில் கலப்பட நெய் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட ஆட்சியர் உத்திரவின் படியும் இன்று மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு குழுவினர் கோவை சுண்டாகாமுத்தூர் ரோடு குனியமுத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி , அன்னம்மாநாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சில கடைகளில் பாமாயில், டால்டாவை கொண்டு போலியாக நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் போலி நெய்களை சந்தை போன்ற இடங்களில் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி நெய்யை தயாரித்த அம்சா , ராஜேஷ்வரி, ராஜாமணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்துரகு ஆகியோரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 100 கிலோ கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 30,000 ஆகும்.

மேற்கண்ட நபர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 பிரிவுகள் 55 மற்றும் 58 ன் கீழ் மாவட்ட தீர்ப்பு வழங்கும் அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்து அவர்களை ஆஜர் படுத்தப்பட உள்ளனர். மாவட்ட தீர்ப்பு அலுவலர் விசாரணை செய்து அவர்களுக்கு விசாரணையின் அடிப்படையில் தண்டனை வழங்கபடும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கோவை மாநகர பகுதியில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு தரம் குறைந்த நெய் விற்பனை செய்ததற்காக மாவட்ட தீர்ப்பு வழங்கும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து மாவட்ட தீர்ப்பு வழங்கும் அலுவலர் தீர்ப்பின் அடிப்படையில் சுமார் 600 கிலோ தரம் குறைந்த கலப்பட நெய் இன்று மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் பொறியாளர் ரவி கண்ணன் , வருவாய் துறை அலுவலரான கிராம நிர்வாக அலுவலர் குருசாமி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் R.கோவிந்தராஜன் மற்றும் R.நரசிம்மன் முன்னிலையில் வெள்ளலூரில் உள்ள கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பயோ கேஸ் ஆலைக்கு மூலப்பொருளாக (feed) வழங்கி அவை அனைத்தும் அழிக்கப்பட்டது.

இது போன்று மேலும் தொடர்ந்து யாராவது பாமாயில் மற்றும் வனஸ்பதி கொண்டு கலப்பட நெய் தயாரிப்பு அல்லது விற்பனை செய்வது தெரியவந்தால் உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்அப் புகார் எண் 9444042322 க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் உணவு பாதுகாப்பு துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க