• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்

May 21, 2022 தண்டோரா குழு

கோவையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியில் ஒன்றாக தேசிய கட்சியான பாஜக உள்ளது.பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற மாவட்ட முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதே போல அண்ணாமலையின் செயல்பாடுகள் தற்போது உள்ள இளைஞர்களுக்கு அதிகம் கண்காணித்து வருகின்றனர்.அதேபோல பல்வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பாஜக கோவை ராம் நகர் மண்டல் சபரி பாலன் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் முன்னாள் பழையூர் மண்டல தலைவர் செந்தில்குமார்,முன்னிலையில் இளைஞரணி மாவட்ட துணை தலைவர் தனபால் உடன் கோவை விகேகே மேனன் ரோட்டில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 120க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்.

தொடர்ந்து மிஸ்டு கால் மூலம் பாஜகவில் உறுப்பினராகும் சேவையையும் செய்து வருவதாக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க