• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஹெச் ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிகவினர் கைது

December 13, 2018 தண்டோரா குழு

கோவையில் ஹெச் ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்ற விசிகவினரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தொட்ட கட்சி விளங்காது என ஹெச் ராஜா பேசியுள்ளார். இதனை கண்டித்து விடுதலை கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று கோவை காந்திபுரம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் ஹெச் ராஜாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். இதனையடுத்து காவல் துறையினர் அங்கு வந்து உருவ பொம்மையை விசிகவினரிடம் இருந்து பறிக்க முயற்சி செய்தனர்.இதனால் போராட்டக்காரர்களுக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேலும் திருமாவளவன் தொட்ட கட்சியை யாரும் தொட மாட்டார்கள் என தீண்டத்தகாத வகையில் பேசிய ஹெச் ராஜாவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க