• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தின விழா

January 22, 2025 தண்டோரா குழு

கோவை, ஜி.ஆர்.ஜி.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் G. ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,பி.எஸ்.ஜி.
ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக அன்னபூர்ணா உணவகங்களின் தலைவர் D.சீனிவாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வாக சந்திரகாந்தி அம்மையார் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் சாந்தி துரைசாமிக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அவர்,கடின உழைப்பும் நம்பிக்கையும் மட்டுமே வாழ்க்கையில் உயர்வை தரும் என கூறினார். தனது ஆரம்ப கால வாழ்வியல் அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர்,பெண்கள் தங்களை சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு கல்வி அவசியம் என சுட்டி காட்டினார்.

இதனை தொடர்ந்து ஜி.ஆர்.ஜி.நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது கங்கா மருத்துவமனை தலைவர் மருத்துவர் S.ராஜசேகருக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்று கொண்ட அவர் தமது வாழ்த்துரையில்,

தற்போது கல்வி பயிலும் மாணவிகள் நவீன தொழில் நுட்ப உலகில் ஏராளமான சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருப்பதாக கூறிய அவர், இதில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதை மட்டுமே தங்கள் இலட்சியமாக கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.உயர்ந்த எண்ணங்களும் அதற்கேற்ற உழைப்பும் அவசியம் என்பதை இன்றைய கால மாணவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ.இன்ஸ்ட்டியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ் உடன் இணைந்து கிருஷ்ணம்மாள் கல்லூரியில் ஜி.ஆர்.ஜி.சென்டர் ஆஃப் எக்சலென்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை கல்வி துவக்க விழா நடைபெற்றது.இதனை வால்வோ இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் கமல் பாலி துவக்கி வைத்தார்.

அப்போது மாணவிகளிடம் பேசிய அவர்,

உலக அளவில் லாஜிஸ்டிக்ஸ் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த துறையில் நமது இந்தியா சாதிப்பதற்கு இது போன்ற துவக்கங்கள் நல் வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணம்மாள் கல்லூரி துறை தலைவர்கள்,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்..

மேலும் படிக்க