• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்ததால் குழந்தை பலி – தாய் மீது வழக்கு

December 7, 2021 தண்டோரா குழு

கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (38). நகை பட்டறை தொழிலாளி. இவரது மனைவி புண்ணியவதி (32). இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர் மீண்டும் கர்ப்பமானார்.

இதனிடையே 4வது குழந்தைக்கு வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்தது. தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை. பிரசவமும் சரியாக இல்லாததால் குழந்தையும், தாயும் மயங்கினர். 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சரியாக பிரசவம் பார்க்காததால் குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகடை வீதி போலீசார் புண்ணியவதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க