• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல மூதாட்டி அடித்து கொலை

March 19, 2019 தண்டோரா குழு

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து, மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியை அடுத்த அன்னை வேளாங்கண்ணி நகரில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ஒரு ஆண் , மற்றும் ஒரு பெண் என இருவர் அவரது வீட்டிற்கு வந்து வீடு வாடகைக்கு உள்ளதா என்பதை கேட்டு உள்ளனர். பிறகு திடீரென அவரை தாக்கி அவர் அணிந்து இருந்த ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர். பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அருகில் இருந்தவர்கள் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மேரி ஏஞ்சலின் கிடந்து உள்ளார். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க