• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடியவர் கைது

August 27, 2020 தண்டோரா குழு

கோவையில் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடிக்குடியிருப்புகளில் வைத்திருந்த செல்போன்கள் திருடுபோவதாக போலீசாருக்கு புகார் வந்தது.இதனைத் தொடர்ந்து, பட்டப்பகலில் வீடுகளுக்குள் தைரியமாக நுழைந்து செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

அதன்படி, சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரைப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது,அவர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திர நாதன் என்பவரது மகன் நவீந்திர நாதன் என்பது தெரியவந்தது.மேலும், கோவையில் வெவ்வேறு வீடுகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க