• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் புரோக்கர் உட்பட 3 பேர் கைது

February 12, 2019 தண்டோரா குழு

கோவையில் விபச்சார பெண் புரோக்கர் உட்பட விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குணியமுத்தூர் கோவைபுதூர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவை குணியமுத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனேஷ் குமார் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வீட்டை சோதனை இட்டதில் வெளி மாநிலத்தை சேர்ந்த 2 இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து விசாரித்ததில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த தேவி (வயது 52) என்ற பெண் புரோக்கரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் படிக்க