• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக கடைகளை அமைக்கும் தடுக்க மனு

March 20, 2018 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதால் பாரம்பரிய வாரச்சந்தை கடை வைத்து உள்ளவர்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர் இதனை தடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(மார்ச் 20)மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமான வாரச்சந்தை அரசு பேரூராட்சி நகராட்சி சார்பில் நடை பெற்று வருகிறது.வியாபரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல் பட்டு வரும் நிலையில் வியாபாரிகள் எதிராக சந்தை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் வகையில் வியாபாரிகள் நடத்தும் கடை அருகே தற்காலிமாக கடை அமைத்து வாரச்சந்தை என்று செயல்படுவது வணிகர்கள் வியாபாரத்தை பாதிப்பு அடைய செய்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்  இதனை உடனடியாக  மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளனர்.

மேலும் படிக்க