• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாடகை கார்களை உரிமையாளர்களிடம் தரவில்லை என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

June 29, 2018 தண்டோரா குழு

கோவையில் வாடகைக்கு வாகனம் எடுத்து கொள்வதாக கூறி 10க்கும் மேற்பட்ட வாடகை கார் உரிமையாளர்களிடம் கார்களை எடுத்து சென்று பல நாட்களாகியும் வாகனங்களைக திருப்பி தரவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சார்ந்த பாலசந்தர் என்பவர் தனது நண்பர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில் தான் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும்,தன்னிடம் வந்த கோவை சீலியூரை சேர்ந்த அஜீத் என்பவர் தனது 6 கார்களையும்,தனது நண்பர்கள் சிலரிடமும் கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதே போன்று நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி பல்வேறு டிராவல்ஸ் நிறுவனங்களின் கார்களை வாடகைக்கு எடுத்து விற்று விட்டதாகவும்,அஜித் மீது வழக்கு பதிவு செய்து தங்களது கார்களை மீட்டு தர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.இதே போல் அஜித் தங்களிடம் கார்களை வாடகைக்கு எடுத்து வேறு ஒருவருக்கு அடமானம் வைத்து விட்டதாகவும்,இது போன்று பல நிறுவனங்களில் கார்களை எடுத்து பல லட்சம் மோசடி செய்துள்ளதாக வாடகை கார் நிறுவனங்களை சார்ந்தவர்கள் 10 க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் இவருடன் சேர்ந்து புகார் அளித்தனர்.

அப்போது அஜித் சொல்லியதாக கூறி தங்களின் கார்களை எடுத்து சென்ற,அவரிடம் பணியாற்றிய சந்துரு என்பவரை பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் தேடி பிடித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.மேலும் கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க