• Download mobile app
17 May 2026, SundayEdition - 3749
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது,நீதிமன்ற வளாகத்தில் இருந்த இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் விளம்பர பதாகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.நீதிமன்றத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும்,வருகின்ற 7 ம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு நடத்துவது என்றும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்றும் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க