July 29, 2017
தண்டோரா குழு
கோவையில் ரூ.3 கோடியே35லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி, 76-வது வார்டுக்குட்பட்ட தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில்ரூ .21.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் அறைகளையும், 86-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் ரூ.52 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் அறைகளையும்,76-வது வார்டு சுப்பிரமணிய உடையார் வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட பல திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் துணை ஆணையாளர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.