• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பு சார்பில் வித்தியாசமான பேரணி !

November 15, 2022 தண்டோரா குழு

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும் இது குறித்தவிழிப்புணர்வு மக்களிடம் அதிக அளவில்செல்லவேண்டும் என்ற நோக்கிலும்’யங் இந்தியன்ஸ்’ (Yi) அமைப்பின்கோவை கிளை, மாபெரும்’பேக்கத்தான்'(Backathon) நிகழ்ச்சியை கோவை வா.வு.சி.பார்க் கேட் முன்புஇன்று மாலை நடத்தியது. இந்த வித்தியாசமான பேரணியை மாவட்டஆட்சியர் டாக்டர் சமீரன் துவக்கிவைத்தார்.

இந்த ‘பேக்கத்தான்'(Backathon) நிகழ்வில் 1000 பேர் பங்குபெற்று பின்நோக்கி பேரணியாக குறிப்பிட்ட பாதையில் நடந்து சென்றனர். கோவையில் உள்ள 8 கல்லூரிகளின் யுவா கிளப் உறுப்பினர்கள்இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, குழந்தை பாதுகாப்புகுறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

நிகழ்வில்மாவட்ட ஆட்சியர் பேசுகையில்:-

குழந்தைகள்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எடுத்து செல்பவர்களாக நீங்கள் உள்ளீர்கள். உங்களுக்குஎனது வாழ்த்துக்கள். இன்று மட்டுமல்லாது, நீங்கள் குடியிருக்கும் இடத்திலும் நம்முடைய மாவட்டம் முழுவதிற்கும் இந்தசெய்தியை எடுத்து செல்லுங்கள், என்றுபேசினார்.

யங் இந்தியன்ஸ் அமைப்பினர் பேசுகையில்:

குழந்தைகளுக்கு பாலியல் சமந்தமான சீண்டல்களில் இருந்துமீண்டு வர, அவர்களுக்குஉதவ நமக்கு அதிகாரமோ,பணமோ தேவையில்லை,சமூக புரிதலும் நல்லமனமும் இருந்தாலே போதும்.குழந்தைகள் எதேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் 1098 உதவி என்னை அழைத்தால் போதும், என்று கூறினர்.

யங் இந்தியன்ஸ் அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைபள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இடையேயும், பொது மக்களிடையேயும்,ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோரிடம் யங் இந்தியன்ஸ் எடுத்து சென்றுள்ளனர்.

குழந்தைகளிடம்,பிறர் தங்களை தொடும்போது எது பாதுகாப்பானது, எது ஆபத்தானது என்பதை பற்றிய விழிப்புணர்வை யங் இந்தியன்ஸ் கொண்டு சேர்த்துள்ளனர்.அதே போல் பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைகளின் பெற்றோர்கள் இது சம்மந்தமாக அடுத்த கட்டமாக செய்ய வேண்டியவை என்ன என்கிற புரிதலை ஏற்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க