• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல்

November 5, 2019 தண்டோரா குழு

கோவையில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையறை வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக
தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை டாடாபாத் பகுதியிலுள்ள மின்சார் வாரிய அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் 1998க்கு முன்பு பணியில்
சேர்ந்தவர்களுக்கு கள உதவியாளர் பணி வழங்க வேண்டும், 2008க்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு தினக்கூலுயாக ரூ.380வழங்க வேண்டும், 2008க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு கேங்மேன் பதவியில் தேர்வுகள் இல்லாமல் முன்னுரிமை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைதுசெய்யபட்டனர்.

மேலும் படிக்க