• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 11 லட்சம் ரூபாய் பறிமுதல்

March 19, 2019 தண்டோரா குழு

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இரு இடங்களில் 11 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். தனியார் நிறுவன ஊழியர்கள் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வந்த போது வாகன சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த தேர்தல் அதிகாரிகள், பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இதே போல , கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை குழுவினரால் வாகன சோதனையின் போது உக்கடம் பைபாஸ் சுண்டக்காமுத்தூர் சாலை சந்திப்பு பாலக்காடு முதல் வாளையார் பேருந்தில் சுப்ரமணியன் என்பவரிடமிருந்து லாரி வாடகை வழங்குவதற்காக எவ்விதமான ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க