• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல் முறையை நடைபெற்ற தேசிய அளவிலான ‘பிர்ஸ்பீ’ போட்டி சென்னை அணி வெற்றி

July 30, 2024 தண்டோரா குழு

தேசிய அளவிலான ‘பிர்ஸ்பீ’ போட்டியின், முதல் இரண்டு இடங்களையும் சென்னை அணிகள் தட்டி சென்றன. கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோபிளை ஜோன் சார்பில் கோவையில் முதல் முறையாக ‘சக்கத் அல்டிமேட் ஓபன்’ தேசிய அளவிலான பிரிஸ்பீ போட்டி, கோவை பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மைதா னம், சரவணம்பட்டி – பர்ஸ்ட் கிக் சாக்கர் பள்ளி, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடந்தது.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற் பட்ட அணிகளை சேர்ந்த சுமார் 600 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில், சென்னை 600098 அணி யினர் முதலிடம், டீன் டோர்னடோஸ் அணி இரண்டாமிடம் பிடித்த னர். சிறந்த அணிக்கான விருதை சென்னையை சேர்ந்த பிளிட்ஸ் அணி தட்டி சென்றது.

பெண்கள் பிரிவில், சென்னையை சேர்ந்த புயல் அணியினர் முதலிடம், சென்னையை சேர்ந்த ஸ்டால் 7 அணி இரண்டாமிடம் பிடித்தது.சிறந்த அணிக்கான விருதை, ஆரோவில் கிராஷ் வென்றது.

மேலும் படிக்க