• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன் முறையாக 200 அடி நீளமான அலங்கார வளைவுகள் வைத்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்

December 21, 2018 தண்டோரா குழு

கோவையில் இன்று மாரி2 படம் வெளியானத்தையடுத்து கோவை மாவட்ட இளைஞர தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாடினர்.

கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த மாரி படம் வெளியாகி மக்களிடையே பெரும் வெற்றியை பெற்றது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி 2 படம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியானது. இதனை வரவேற்கும் வகையில் கோவை மாவட்ட இளைஞரணி தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திரையரங்கு முன்பு படம் வெற்றி பெற வேண்டுமென்று தனுஷ் புகைப்படமான பேனர்கள் வைத்தும், கோவையில் முதன் முறையாக 200 அடி நீளமான அலங்கார வளைவுகள் வைத்தும், மேலதாளத்துடன் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், செயலாளர் பாலா உள்ளிட்ட மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க