• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை மையம் திறப்பு

July 19, 2019 தண்டோரா குழு

கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.

வெளிநாடுகளில் முதியோர்களுக்கான பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு அதை நடைமுறையில் கொண்டு வருவது அதிகமாகி கொண்டே இருக்கின்றது.இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு மருத்துவம் குறித்த பிரச்சனையானது அதிகமாக காணப்படுகிறது. இப்பிரச்சனையை கருத்தில் கொண்டு முதியோருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்
கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள பி எஸ் ஜி மருத்துவமனையில் முதன் முறையாக முதியோர் நலத்துறைக்கு என்று தனியாக மருத்துவம் மையம் துவங்கப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா பி.எஸ்.ஜி.குழுமங்களின் அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் திறந்து வைத்தார்.இதன் மூலம் முதியோருக்கு மருத்துவ ஆலோசனை,முதியோர் பாதுகாப்பு, சிறந்த மருத்துவம்,போன்ற வசதிகள் மேற்கொள்ள உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிகச்சியில் முதியோர் நலத்துறை பவுண்டேசன் நடராஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க