• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாநாடு திரைப்படத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் – 8 பேர் கைது !

November 30, 2021 தண்டோரா குழு

கோவையில் “மாநாடு” திரைப்படத்தின் போது கே.ஜி திரையரங்கில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிம்பு நடிப்பில் கடந்த 25ம் தேதி வெளியான மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்,
கோவையில் “மாநாடு” திரைப்படத்தின் போது கே.ஜி திரையரங்கில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இரு தரப்பினர் மீதும் கலகம் செய்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் பந்தய சாலை காவல்துறையினர் வழக்குப்பதிவு ஒரு தரப்பில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேஸ்வரன், கௌதம், கதிரவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மற்ற 7 பேரை தேடி வருகின்றனர்.

மற்றொரு தரப்பில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது அசாருதீன், அப்துல்ரகுமான், முகமது அஸ்பர், முகமது சல்மான் ஷாநவாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு தரப்பைச் சேர்ந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க