• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாணவி உட்பட 2 பேர் தற்கொலை

December 9, 2021 தண்டோரா குழு

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்புரோஸ். பழைய இரும்பு வியாபாரி. இவர் மகள் அபிராமி (17). இவர் பிளஸ் 2 படித்து வந்தார். அம்புரோஸ் தனது மகளை அடிக்கடி கண்டித்து வந்துள்ளதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த அபிராமி தனது வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிமருந்து குடித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் இறந்தார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பிரசானன் (43). கால் டாக்ஸி டிரைவர்.‌ கடன் பிரச்சினையால் இவர் காரை விற்பனை செய்து விட்டார்.‌ இதனால் மன விரக்தியில் காணப்பட்ட இவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌ தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க