• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாசு கலங்கிய தண்ணீருடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 25, 2019 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் தொழிற்சாலை கழிவுகளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதால் , விவசாயிகளும் , பொதுமக்களும் , கால்நடைகளும் பாதிக்கப்படுவதாகவும் எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மாசு கலங்கிய தண்ணீரை எடுத்து வந்து விவசாயிகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கோவையை அடுத்த மோப்பிரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்து , நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும் இதனால் , அப்பகுதி விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக கூறி , விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கழிவு நீர் கலங்கிய தண்ணீரை கால்நடைகள் குடித்ததால் அப்பகுதியில் உள்ள ஆடு மாடுகள் நோய்யினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலங்கிய தண்ணீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கும் பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க