• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மலக்குழி மரணங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – புதிய மாவட்ட ஆட்சியர்

February 18, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மலக்குழி மரணங்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள ராஜாமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த ஹரிஹரன் தமிழ்நாடு நகர்புற மேம்பாடு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய தலைவராக மாற்றப்பட்டார். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியராக திருச்சி ஆட்சியர் ராஜாமணி நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து இன்று அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

விரைவில் வெயில் காலம் துவங்க உள்ள நிலையில் குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முன்னாள் ஆட்சியர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டங்களில் பங்கேற்கவில்லை என விவசாயிகள் தெரிவித்திருந்தது குறித்து கேட்ட போது அனைத்து துறை குறைதீர்ப்பு கூட்டங்களிலும் ஆட்சியர் என்ற முறையில் தான் நிச்சயம் பங்கேற்பேன்.மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களில் வழங்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என்றார்.

மேலும், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது குறித்து கேட்ட போது அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க