• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மரத்துக்கு நாற்பதாம் ஆண்டு விழா; கேக் வெட்டி கொண்டாடிய இளைஞர்கள்

September 5, 2020 தண்டோரா குழு

கோவை புலியகுளம் பகுதியில் 40
ஆண்டுகள் பழமையான அரச மரத்திற்கு விழா கொண்டாடும் வகையில் அப்பகுதி இளைஞர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.

கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் 40 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது.அந்த மரத்தின் அடியில் சிறிய விநாயகர் சிலை வைத்து பொது மக்கள் வழிபட்டு வந்தனர்.தொடர்ந்து அந்த அரச மரத்திற்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்தனர்.

இந்தநிலையில் கோவில் கட்டும் பணிக்கு ஊர் பொதுமக்கள் தீர்மானித்த நிலையில், அரசமரத்தை அப்புறப்படுத்தாமல் கோவில் கட்ட திட்டமிடப்பட்டது.இதைத் தொடர்ந்து கருப்பராயன் கோவில் வீதி இளைஞர்களின் முயற்சியால் மரம் அப்புறப்படுத்தபடாமல் கோவில் பணிகள் நடைபெற்றது.இப்படியிருக்க அரச மரத்திற்கு நாற்பது வயது ஆன நிலையில் அதைக் கொண்டாடும் வகையில்அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மரத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அதேபோல் கேக் வெட்டிய பின் ஒரு துண்டு கேக்கினை மரத்தின் அடியில் வைத்து நன்றி செலுத்திய இளைஞர்கள், அந்த பகுதி மக்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க