• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது

May 2, 2022 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் பகுதியில் நவீன் மருத்துவமனை உள்ளது. இங்கு சரஸ்வதி என்பவர் நர்சாக பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது கணவர் மதிமொழிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.கடந்த ஓராண்டுக்கு முன்பு சரஸ்வதியை பணியிலிருந்து மருத்துவமனை நிர்வாகம் நிறுத்திவிட்டனர். தனது மனைவிக்கும் தனக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணம் என சரஸ்வதியின் கணவர் மதிமொழி நினைத்தார்.

இதையடுத்து அடிக்கடி மருத்துவமனைக்கு போன் செய்யும் மதிமொழி போனை எடுக்கும் அலுவலக பணியாளர்கள் இடம் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.இப்படி பலமுறை அவ்வாறு செய்து வருவது அங்கிருந்த ஊழியர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் நவீன் மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு வந்தது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் நவீன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியபோது சரஸ்வதியின் கணவர் மதிமொழி தான் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து மருத்துவமனை மேலாளர் நித்தியானந்தம் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து வேடப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த சரஸ்வதியின் கணவன் மதிமொழியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க