• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்த இந்து மக்கள் கட்சியினர்

August 22, 2020 தண்டோரா குழு

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை உள்ளதால் கோவையில் பேக்கரி கடையில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினர்.

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இந்து அமைப்புகள் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதன் காரணமாக கோவையில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தனியார் இடங்களில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேர்முட்டி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் பூசணிக்காயில் கொரானா வைரஸ் உருவம் பொறிக்கப்பட்டு அதனை விநாயகர் வேல்கொண்டு வதம் செய்யும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,

தமிழக அரசு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கோவையில் 32 தனியார் இடங்களில் இந்து மக்கள் கட்சி சார்பாக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும். சிலைகளை மாலை 3 மணி அளவில் கூட்டம் சேராமல் குறைந்த நபர்களைக் கொண்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க