• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெருகி வரும் கரும்புகை கக்கும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை

July 25, 2019 தண்டோரா குழு

கோவையில் கரும்புகை கக்கும் அரசு பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜு கோவை – சிறுவாணி சாலையில் உள்ள செட்டிபாளையத்தில் வாகன சோதனை மேற்கொண்டார்.அப்போது அவ்வழியாக கரும்புகை கக்கிய நிலையில் பயணிகளோடு வந்த ‘ 14″ஏ” வழித்தட எண் கொண்ட அந்த பேருந்தை ஆய்வு செய்த பிறகு பயணிகள் வேறு பேருந்துக்கு மாற்றி விட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ” டஞ்ஜன் பேருந்தை ” கொண்டு சென்றனர்.

மேலும் அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து தகுதிச் சான்று ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேரூரை அடுத்த ஆலந்துறை நோக்கி சென்ற அரசு பேருந்தில் புகையை ஏற்படுத்திக்கொண்டு சென்ற அரசுப் பேருந்தை அப்பேருந்தின் பின்புறம் சென்று இருந்த இரு சக்கர வாகன ஓட்டி புகையுடன் செல்லக்கூடிய வாகனத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் குறிப்பிட்டார்.

இந்தநிலையில்காந்திபுரத்தில் இருந்து காளிமங்களம் சென்ற 59 D/E என்ற அரசு பேருந்தும், உப்பிலிபாளையத்தில் இருந்து மதிபாலையம் சென்ற S-4 என்ற அரசு பேருந்தும் சாலையில் கரும்புகையை கக்கியபடி சென்றது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் இப்பேருந்துகளின் புகையில் இருந்து தப்பினால் போதும் என்று மின்னல் வேகத்தில் தங்கள் வாகனத்தில் பறந்தனர்.

மேலும் படிக்க