• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் ஜமாத்தினர் மனு

September 16, 2019 தண்டோரா குழு

கோவையில் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தியும் மாநகராட்சி ஆணையாளரிடம் ஜமாத்தினர் மனு அளித்தனர்.

கோவை 86 வது வார்டுக்கு உட்பட்ட அல்-அமீன் காலனி பிலால் நகர், பொன்விழா நகர், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் தார் சாலையை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி ஜமாத்தார்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜமாத்தினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் தார்சாலை போடப்படும் என்றும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென்றால் மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க