• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரபல அலைபேசி விற்பனை உரிமையாளருக்கு கொரோனா தொற்று

June 22, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.முக கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் சமூக் இடைவெளியை பின்பற்றாதவர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் வணிக ரீதியிகான தொடர்பில் உள்ளவர்களுக்கு கொரணா தொற்று எண்ணிக்கை ஏற்பட்டு விடுமோ அச்சம் எழுந்துள்ளது. காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நகை கடைக்கு சென்னையில் இருந்து அழைத்து வரப்பட்ட ஊழியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று கண்டறியபட்டது. மேலும் காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தொலைபேசி விற்பனை கடையின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடைகளுக்கு வந்தவர்களின் பட்டியலை சுகாதார துறை அதிகாரிகள் தயார் செய்து வருகின்றனர்.

மேலும் அவர் வசிக்கும் நான்காவது வீதியில் தடுப்புகள் அமைக்கபட்டு உள்ளது. இதேபோல் 11வது வீதியிலும் தடுப்புகள் அமைக்கபட்டு உள்ளது. கோவையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு உள்ள நிலையில் கொரணா தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் தடுப்புகள் அமைக்கபட்டு பாதுகாப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க