• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிப்.23ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி !

February 8, 2020

கோவை மாவட்டத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மண்டல அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் செய்தொயாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

கோவை மாவட்டத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 23ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கு தேவையான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விதிமுறைக்குட்பட்டு தடுப்புகள் அமைப்பு, சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை நடைபெற்றது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. கோவையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பாக சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக வங்கி பணியாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுதும் உள்ள 6.97 லட்சம் சுய உதவி குழுக்களில் 103.32 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2011லிருந்து 63,879 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஊரக பகுதிகளில் 5742 சுய உதவி குழுக்கள், நகர்ப்புற பகுதிகளில் 4481 சுய உதவி குழுக்கள் என மொத்தம் 10,223 அமைக்கப்பட்டுள்ளது. இதில், கிட்டத்தட்ட 1961 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும் 405 கோடி ரூபாய் சுய உதவி குழுக்கள் வங்கி கடன் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகாலத்தில் வழங்கியுள்ளோம்.
ஏழைகளுக்கு அதிகளவில் இந்தியாவிலேயே கோவையில் வீடு கட்டி வழங்கும் திட்டம் அதிகமாக வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. அதில், ரூ.2,10,000 ஏற்கனவே வழங்கினாலும், மீதம் தேவைப்படும் 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வழங்கவும் வங்கிகள் தர இந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை பெரியக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக எடப்பாடி அரசால் நடத்தப்பட்டது.இந்த விழாவில், பணியாற்ற தஞ்சையை சேர்ந்த 365 பேர் நிரந்தர மற்றும் 250 பேர் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 615 பேர் மற்றும் தஞ்சை மண்டலங்கள் 18 நகராட்சிகள் , மதுரை மண்டலங்களில் 8 நகராட்சிகள் சேர்த்து 664 பேர் என மோத்தம் 1272 பேர் 15 நாட்களாக இரவு, பகலாக பணியாற்றியதால், 2007 மெட்ரிக் டன் தாவரக்கழிவுகள் அகற்றப்பட்டது. 10 லாரிகள், 4 ஜே.சி.பி., 35 துப்புரவு ஆய்வாளர்கள், 42 துப்புரவு மேற்பார்வையாளர்கள் பணியாற்றினர். 1272 துப்புரவு பணியாளர்களுக்கு, தலா 1000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என்றார்.

மேலும் படிக்க