• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிப்ரவரி 26ம் தேதி பிரபல பாடகி ஜொனிதா காந்தி நேரடி இசை நிகழ்ச்சி !

January 31, 2023 தண்டோரா குழு

கோவையில் பிரபல பாடகி ஜொனிதா காந்தி நேரடி இசை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26ம் தேதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜொனிதா காந்தி, குறைந்தது 10 மேற்பட்ட மொழிகளில் (தமிழ், இந்தி, ஆங்கிலம்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி) பாடியிருக்கிறார்.காதல் கண்மணி திரைப்படத்தில் இருந்து மென்டல் மனதில், பீஸ்ட் திரைப்படத்தில் அரபுகுத்து, டான் திரைப்படத்தில் பிரைவேட் பார்ட்டி,வாரிசு திரைப்படத்தில் இருந்து ஜிமிக்கி பொண்ணு மற்றும் பிற மொழிகளில் பல பாடல்களுக்குப் பின்னால் குரல் கொடுத்தவர்.

ஜொனிதாவின் கவர் பாடல்கள் யூடியூபில் மிகவும் பிரபலம்,மேலும் அவரது கவர் பதிப்புகளையும் நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு அருண் ஈவென்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ளது. மாலை 5 மணியளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 2.5 மணி நேரம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு 25,000+ ரசிகர்களை கொடிசியா மைதானத்தில் கவரவுள்ளது.நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர்கள் இந்த நிகழ்வை சர்வதேச இசை கச்சேரிகளுக்கு இணையாக நடத்திட வேண்டுமென முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து அருண் ஈவென்ட்ஸ் அருண் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள்
கூறுகையில்,

கோவையில் எங்கள் மூலம் நடைபெற்ற இசை கச்சேரிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த கச்சேரியில் ஜொனிதாவின் தமிழ் ஹிட்ஸ் ஒரு பெரிய வரிசை இருக்கும், பாடகி பாலிவுட் நிறைய ஹிட்களை வழங்கியுள்ளார்.தெலுங்கு மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் பாடல்களை எதிர்பாக்கலாம்.

டிக்கெட்டுகள் Sporty.PAYTM INSIDER, BOOK MY SHOW கிடைக்கும்.மேலும் நிகழ்வு நடைபெறும் கொடிசியா வளாகத்தில் கவுண்டர்கள் இடம்பெறும், அங்கு பெற்றுக்கொள்ளலாம். ரூ.500 முதல் 5000 வரை டிக்கெட்டுகள்

டிக்கெட் தொடர்புக்கு 99423 15886, 99523 59888, 98654 96622

மேலும் படிக்க