• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

October 14, 2020 தண்டோரா குழு

குளத்துப்பாளையம் பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2018 19 மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கொளத்துப்பாளையம் பொது விநியோக கடையை கட்டிடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி திறந்து வைத்தார்.தாளியூர் பகுதியில் பொதுமக்களுடன் சேர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கபசுர குடிநீர் குடித்தார். பின்னர் களிக்க நாயக்கன் பாளையத்தில் கோவை தொண்டாமுத்தூர் நரசிபுரம் சாலை மேம்பாடு செய்யும் பணிக்கு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதே பகுதியில் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க நிதி ஒதுக்கி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை துவக்கி வைக்கப்பட்டது. கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் உழைக்கும் மகளிருக்கான அம்மா இரு சக்கர வாகனம் மானிய விலையில் 9 பேருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வழங்கினார்.

மேலும் படிக்க