• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் இரண்டு ஏர்கன் பறிமுதல்

March 28, 2019

கோவை வடவள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 ஏர்கன் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆய்வாளர் ஜோசப், தலைமை காவலர் ரங்கசாமி, ராஜேந்திரபிரசாத் ஆகியோர் வடவள்ளி- தொண்டாமுத்தூர் சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வண்டியில் ரூ.5 லட்சம் பணம் மற்றும் இரண்டி ஏர்கன்கள் இருந்தன.

அந்த பணம் கணபதி பகுதியில் இருந்து இருட்டுபள்ளம் பகுதியில் உள்ள தனியார் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்படுவதாக வாகனத்தில் இருந்தவர்கள் கூறினர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தற்போது அந்த பணத்திற்கான உரிய ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஏர்கன்கள் இரண்டும் உரிமம் பெறப்படாதவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க