• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பரவலாக பெய்து வரும் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

April 22, 2019 தண்டோரா குழு

கோவையில் மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் மாலை நேரங்களில் நகரில் குளிர்ச்சி நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழக்கத்துக்கு மாறான வகையில் வரலாறு காணாத அளவுக்கு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் அதிகபட்சமாக 100 முதல் 103 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது. அதிக வெப்பம் காரணமாக அனல்காற்று வீசியதையடுத்து பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவையின் மாங்கரை , ஆட்சியர் அலுவலகம், குனுயமுத்தூர், உக்கடம் , வடவள்ளி, காந்திபுரம், இடையர்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த வரும் மழையால் நகரில் குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க