• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பத்திரிகையாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம்

June 11, 2018 தண்டோரா குழு

கோவையில் பத்திரிகையாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம்
புதிய தலைமுறை நிருபர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி கோவையில் பத்திரிகையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி வந்த பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நவ இந்தியா அருகே உள்ள தனியார் மண்டபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி கடந்த 8 ஆம தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான அமீர் கோவையில் நடந்த வன்முறை சம்பவங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவரை பேசவிடாமல் இடைமறித்த ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக கோவை பீளமேடு போலீசார் புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனம் மீதும் அதன் செய்தியாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குபதிவு இந்திய அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிரானது, கருத்து சுதந்திரத்தை நசுக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் வகையில் காவல் துறையினர் போட்ட பொய் வழக்கை திரும்பபெறக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் நூழைவாயில் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையை கண்டித்தும், வழக்கை திரும்பபெறக்கோரி கோசங்களை எழுப்பியவர்கள் மாநகர காவல் துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சித்தலைரை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் காவல் துறை போட்ட பொய் வழக்கை திரும்பபெற வலியுறுத்தி தமிழக முதலமைச்சரிடம் பேச கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க