• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பட்டத்தரசியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

February 13, 2019 தண்டோரா குழு

கோவையில் பட்டத்தரசியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாப்பநாய்க்கன்பாளையம் பகுதியில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன் சிலையை திருடியுள்ளனர். மேலும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள், காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் பந்தயசாலை காவல் துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் திருடர்களை தேடி வருகின்றனர். திருடப்பட்ட சிலையின் மதிப்பு பல இலட்ச ரூபாய் இருக்குமென கூறப்படுகிறது.

மேலும் படிக்க