• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் வாயிலாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு அன்னதானம்

January 27, 2021 தண்டோரா குழு

கோவையில் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் வாயிலாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவையில் நேரு நகர் அரிமா சங்கம் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பினர் இணைந்து பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகின்றனர்.குறிப்பாக அரிமா சங்கத்தின் பசிப்பிணி போக்கும் திட்டம் தற்போது விரிவுபடுத்தப்பட்டு உணவு இல்லாமல் அவதிப்படும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவளித்து வரப்படுகிறது.

இந்நிலையில், கோவை குரும்ப பாளையம் பகுதியில் உள்ள யுனைடெட் ஆதரவற்றோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி,மாவட்ட அரிமா சங்கம் 324-B1 பசிப்பிணி போக்கும் மாவட்டத் தலைவர் அரிமா ஜெயசேகரன் தலைமையில் நடைபெற்றது. நேரு நகர் அரிமா சங்க உறுப்பினரும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவருமான அரிமா M. செல்வகுமார் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இதில்,. முன்னதாக ஆதரவற்றோர்களுடன் இணைந்து கேக் வெட்டி அனைவருக்கும் வடை, பாயாசத்துடன் அறு சுவை உணவு பரிமாறப்பட்டது.நேரு நகர் அரிமா சங்க செயலாளர் செந்தில்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ் கே டி கருப்புசாமி ,அசோக் குமார் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஷ், சுப்பிரமணியம், அசோக்குமார், கண்ணன், பிரேம், கார்த்தி, சிவா, கனகராஜ், லட்சுமண குமார், செல்வராஜ், அண்ணாச்சி, பூவரசன், தங்கமணி, சுந்தர், முத்து, நேரு, சங்கர், விஜயகுமார், இளங்கோ, சரவணன், கார்த்தி, தமிழ் விஜய், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க