• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் பயிற்சி அகாடமி திறப்பு

November 5, 2018 தண்டோரா குழு

கோவையில் புதியதாக நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் பயிற்சி அகாடமி திறப்பு விழா நடைபெற்றது. இந்த பயிற்சி மையத்தில் அழகு கலை சார்ந்த அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சபரிமலை விவகாரத்தில் நம்பிக்கையை மதித்து , பெண்ணியத்தை அங்கு தேட வேண்டாம். மீடு விவகாரம் உணர்வு , சுயமரியாதை சார்ந்தது. நான் அதிகமாக ஷூட்டிங் இடத்தில் தான் பாதுகாப்பாக உணர்தேன். வெளியில் தான் அதிகமாக பாதுகாப்பற்ற சூழல் இருந்தது. இந்திய ஒருமை பாட்டிற்கு பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிறந்த அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த அங்கீகாரத்தை சிலை எழுப்பி காட்ட வேண்டுமா? அதுவும் 3 ஆயிரம் கோடி எப்படி செலவானது, அது என்ன காந்தி கணக்கை போல பட்டேல் கணக்கா என கேள்வி எழுப்பி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நேச்சுரல்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க