• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நான்காவது நாளாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டம்

August 20, 2020 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் நான்காவது நாளாக டாஸ்மாக் ஊழியர்கள் கூட்டமைப்பினர் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.

கொரோனா தொற்றறால் உயிரிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.பணியின்போது உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும்,டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள் மற்றும் கப சுர குடிநீர் வழங்க வேண்டும்.கடைகளில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.இதில் அத்து மீறல்கள் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17 ந்தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்து சங்க கூட்டமைப்பினர் மாநில அளவில் கடை முன் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கோவையில் நான்காவது நாளாக பா.ம.க தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வேலுமணி தலைமையில் மசக்காளிபாளையம்,விளாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மத்தி மாநில SC ST அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன்,தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மாநில செயலாளர் மதியழகன்,தொ.மு.க.பரமேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்த படி சமூக விலகலை கடைபிடித்து கோரிக்கைகளை வலியிறுத்தி கோசங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டன், ரமேஷ்பாபு, செந்தாமரை, பாலசஞ்சீவி உட்பட அனைத்து சங்க கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க