• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களால் பொது மக்கள் பீதி

July 24, 2020 தண்டோரா குழு

கோவை இருகூர் தீபம் நகர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் மேல் சட்டையின்றி கையில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடம் உலா வந்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் இதே பகுதியில் கம்பனி ஒன்றில் உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு நேரத்தில் ஆயுதங்களுடன் உலா வரும் மர்ம நபர்களை கண்டறிய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் சிங்காநல்லூர் பகுதியில் குழுவாக வந்த மர்ம நபர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்ற சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க