September 17, 2018
தண்டோரா குழு
கோவைபி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் 15-வது ஆண்டு நல்லி திசை எட்டும் காலாண்டு இதழ் சார்பில் மொழியாக்க விருது வழங்கும் விழாநடைபெற்றது. இதில் மொழியாக்க எழுத்தாளர்கள் 7 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
நல்லி நிறுவனம் நடத்தும் திசைஎட்டும் காலாண்டு இதழ் சார்பில் கடந்த 14 ஆண்டுகளாக மொழியாக்க எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றனர். 15-வது ஆண்டாக இந்த ஆண்டு விருது வழங்கும் விழா கோவை பீளமேடு கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி தாளாளர் நந்தினி ரங்கசாமி வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நல்லி நிறுவன அதிபர் குப்புசாமிசெட்டியார் தலைமைவகித்தார்.
இவ்விழாவில் மொழியாக்கஎழுத்தாளர்கள் பூரணச்சந்திரன், ஜி.எஸ்.ஐயர், அ.சு.இளங்கோவன்,அக்களுர் ரவி,
இராம.குருநாதன், கே.நல்லதம்பி, எம்.எஸ். ஆகிய 7 பேருக்குசிறப்பு அழைப்பாளராக் கலந்து கொண்ட சக்திகுரூப் தலைவர் எம்.மாணிக்கம் விருது வழங்கி கவுரவித்தார்.
பின்னர் விழாவில் பேசிய அவர்,
மனிதனின் உன்னத படைப்புகளிலேயே உயர்ந்த படைப்பு மொழிதான். மனிதனை தவிர எந்த உயிர் இனத்துக்கும் கிடைக்காததும் மொழிதான். ஒவ்வொரின் கருத்தை பிரதிபலிக்க மொழி அவசியமாகிறது. மொழி இல்லை என்றால் மனிதன் அறிவை வளர்த்துக்கொள்வது சாத்தியமாகாது. ஓவ்வொரு மொழிக்கும் தனித்தன்மைஉள்ளது. பெங்காளி, மலையாளம், தமிழ், ஆங்கிலம் என ஒவ்வொருமொழியையும் அவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் படைக்கபட்டு உள்ளது. ஜப்பானில் ஒரு சிறந்த படைப்பு வந்தால் உடனடியாக அதனை மொழி பெயர்த்து விடுகிறார்கள். ஜப்பானியர்கள் அதிகமாக படிக்கிறார்கள். அவர்களிடம் உலகை அறியவேண்டும் என்ற தாக்கம் உள்ளது. பாடப்புத்தகம் மட்டும் நம்மை வாழ வைத்துவிடாது. நாம் தேர்ந்தெடுக்கும் துறைசார்ந்த அறிவை வளர்த்து கொள்ளபுத்தகம் அவசியம். இப்போது இண்டர் நெட் போன்றவற்றால் நமது தேடுதல் எளிமையாக்கப்பட்டு உள்ளது. எனவே, மாணவர்கள் வேற்று மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட புத்தகங்களை தேடி பிடித்து கற்கவேண்டும். நல்லிகுப்புசாமிசெட்டியார் செய்து வரும் இந்தசாதனையினால் வரும் காலத்தில் உள்ளசந்ததியினருக்கும் பயன் கிடைக்கிறது.தொடர்ந்து இந்த சேவையை நல்லிநிறுவனம் மேற்கொள்ளவேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தலைமை வகித்து பேசிய நல்லிகுப்புசெட்டியாளர் பேசுகையில்,
இந்த பணியை கடந்த 17 ஆண்டுகளாகசெய்துவருகிறோம். முதன் முதலாக ஒரே ஒருவருக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டது. அப்புறம் சென்னையில் மிகப்பெரியவிழா நடத்தி 13 பேருக்கு விருது வழங்கினோம். இந்தவிருதின் முக்கியத்துவம் கருதிமுதல்வராக இருந்த கலைஞர் அரசு சார்பில் செய்யவேண்டும் என்று ஆணைபிறப்பித்து இருந்தார். இந்த மொழியாக்கத்தினால் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பயன் அடைகிறார்கள். தொடர்ந்து அவர்களின் வளர்ச்சிக்கு நல்லிநிறுவனம் துணைநிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவிஞர் சிற்பி.பாலசுப்பிரமணியம்,எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,டாக்டர் பி.ஆர்.நடராஜன்,முனைவர் யசோதாதேவி, எஸ்.நிர்மலா, உள்படபலர் கலந்து கொண்டனர்.