• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டு விழா

February 23, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆண்டு விழாவில் காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவ,மாணவிகள் நடனமாடி அசத்தினர்.

இந்திய செஞ்சிலுவை சங்கம் கோவை மாவட்ட கிளையின் சார்பில் இயங்கி வரும் பெண் குழந்தைகளுக்கான கம்யூனிட்டி கேர் ஹோம் தளிர் அமைப்பின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. கோவை அவினாசி சாலை ஆருத்ரா அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் தலைவர் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.தொடர்ந்து பி.எஸ்.ஜி.மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பேசினார்.

இவ்விழாவில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவ,மாணவிகள் பல்வேறு வேடமணிந்து நடனமாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விழாவின் இறுதியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை தலைவர் குமுதா பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க